மீண்டும் புதிய உச்சம் சென்ற சென்செக்ஸ்.. 64 ஆயிரத்தை நெருங்குகிறது!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (09:35 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதும் நேற்று 63 ஆயிரத்தை தாண்டியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 64 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 395 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 490 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 860 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்