பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?
செவ்வாய், 29 நவம்பர் 2022 (10:12 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 200 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 195 புள்ளிகள் அதிகரித்து 62 ஆயிரத்து 704 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் நிப்டி இன்று 61 புள்ளிகள் உயர்ந்து 18624 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது