தங்கம் இறக்குமதி தொடரும் சிக்கல் – 5.5 சதவீதம் சரிவு !

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (15:18 IST)
தங்கம் இறக்குமதியில் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 5.5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி பற்றிய விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 29.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதே மாதங்களில் இந்தியா 31.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் குறைவு என தெரியவந்துள்ளது.

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்து ஆபகரணங்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தங்க இறக்குமதி சரிவால் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 28.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே ஏற்றுமதி நடைபெற்றிருந்தது. இது கடந்த ஆண்டை விட 6.3 சதவிகிதம் குறைவாகும். இதனால் தங்க மற்றும் ஆபகரணங்கள் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்