முடிந்தால் எங்கள் நாட்டு பொருட்களை புறக்கணித்து பாருங்கள்: இந்தியாவுக்கு சீனா சவால்

செவ்வாய், 19 மார்ச் 2019 (21:57 IST)
சீனா மொபைல், சீனா டிவி, சீனா பட்டாசு, சீனா பொம்மை என இந்தியாவில் எங்கு பார்த்தாலும் சீனா பொருட்கள் விரிந்து பரந்து கிடக்கின்றன. அவ்வப்போது சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சுதேசவாதிகள் குரல் எழுப்பினாலும் மக்களால் சீன பொருட்களில் இருந்து வெளியே வர முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை
 
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பின் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் மீண்டும் சீனாவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கியது. இதுகுறித்த ஹேஷ்டேக்கும் இந்தியாவில் டிரெண்ட் ஆனது
 
இந்த நிலையில் இதுகுறித்து சீன பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்" என இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியா விரும்புகிறதோ இல்லையோ, இந்தியர்கள் இன்னும் சீனாவில் தயாரிக்கும் பொருள்களைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், இந்தியாவுக்குப் பெரிய அளவில் தனக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க இயலாது. இந்தியாவுக்குள் இருக்கும் சில சக்திகள் அந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தி வருகின்றன" என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசியல்வாதிகள் வெறுமனே டுவிட்டரில் கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக நாட்டின் உண்மையான பலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்" என்று அறிவுறுத்தியும் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்