மேஷம்
இன்று சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
ரிஷபம்
இன்று சற்று உடல் நலம் பாதிக்கும். இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள். தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
மிதுனம்
இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
கடகம்
இன்று எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9
சிம்மம்
இன்று குடும்பப் பிரச்னைகளை மனதில் கொண்டு வியாபாரம், அலுவலக இடங்களில் அதை வெளிப்படுத்த வேண்டாம். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரத்தில் முதலீடுகள் செய்து மேன்மை பெறலாம். பொறுமை தேவை. கூட்டுத் தொழில் செய்யும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கன்னி
இன்று பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும். நூதன கவர்ச்சி மூலமாக அனைவரையும் உங்கள் வசமாக்க தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3
துலாம்
இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
விருச்சிகம்
இன்று வெளியிடங்களில் அவமானம் அடைய நேரிடும். கூடுதல் லாபங்களுக்கு ஆசைப்பட்டு தொழிலில் போட்ட முதலை இழந்து விடாதீர்கள். கூட்டுத் தொழில் புரிவோர் அமைதியாகப் பேசி கருத்து வேறுபாடுகளை அகற்றிக் கொள்ளுங்கள். தடைபட்டிருந்த நிச்சயித்த திருமணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6
தனுசு
இன்று வீட்டுப் பெண்கள் முகச்சுளிப்பு காட்டினாலும் பொறுத்துக் கொள்வதும் எதிர்வாதம் செய்யாதிருப்பதும் நல்லது. அனைத்து காரியங்களிலும் வெற்றியும் பலவழிகளிலும் வருமானமும் வந்து சேரும். தொழில்கள் அமைதியாக நல்லவிதமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
மகரம்
இன்று ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9
கும்பம்
இன்று உடல்நிலை சீராகும். சகோதரச் சண்டைகள் தீரும். அரசுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டுவர். அலுவலகப் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்யமான உதவிகள் கிடைக்கும். இதனால் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3
மீனம்
இன்று தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் உண்டு. தக்க செயல்பாட்டினால் மட்டுமே வெற்றிகள் கிட்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நல் வாய்ப்புகளை நலுவ விடாதீர்கள். தங்களால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7