மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

vinoth

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (14:58 IST)
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

இதையடுத்து யுவ்ராஜ் சிங்கின் கேரியர் மிக விரைவாக முடிய, தோனிதான் காரணம் என்று யோக்ராஜ் சிங் கோபத்தைத் தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார். சர்வதேச போட்டிகளில் ஜொலித்ததைப் போலவே யுவ்ராஜ் ஐபிஎல் களத்திலும் தன்னை நிரூபித்தார். சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடிய போது அவர் கோப்பையை வென்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் வரவுள்ளார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஜாகீர்கான் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்