கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவியையும், காதலனையும் கணவன் தலையை துண்டாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கொட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (60). இவருக்கு முதலில் கலியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் அவர் பிரிந்து சென்ற பின்னர், கொளஞ்சி 40 வயதான லட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் இந்த விஷயம் கொளஞ்சிக்கு தெரிய வர, அவர் லட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் கொளஞ்சி வெளியூருக்கு வேலைக்கு செல்லும்போது தங்கராசுவை வீட்டிற்கே வர செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் லெட்சுமி.
இவர்களை கையும், களவுமாக பிடிக்க எண்ணிய கொளஞ்சி, வேலைக்காக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அன்று இரவே தங்கராசுவை வரவழைத்த லட்சுமி மொட்டை மாடிக்கு அவரை அழைத்து சென்று, பின் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயம் அங்கே வந்த கொளஞ்சி அவர்களது உல்லாசக் கோலம் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.
உடனே அங்கிருந்த அரிவாளை எடுத்த அவர் லட்சுமியையும், தங்கராசுவையும் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் இருவரது தலைகளையும் வெட்டி எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்று தலைகளை ஒப்படைத்து சரணடைந்துள்ளார்.
விடியற்காலையில் மொட்டை மாடியில் தலை இல்லாமல் இரண்டு பிணங்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான மக்கள் போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே, கொளஞ்சி மத்திய சிறைச்சாலையில் சரணடைந்த தகவல் வந்துள்ளது. அதன்பின்னர் அவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K