ஒல்லியானவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்ற பொதுவான கருத்து தவறானது என்கிறார் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் உடல் எடைக்கும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதே உண்மை.
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவது. இது ஹார்மோன் உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கு அவசியம். இது அதிகரிக்கும்போது, இரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தி இருதய நோய்களை உருவாக்கும்.
குடும்ப வரலாற்றில் இதயநோய் அபாயம் உள்ளவர்கள் மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தோற்றத்தை கருதாமல், இரத்தப் பரிசோதனை மூலம் கொலஸ்ட்ரால் அளவை தெரிந்துகொள்வது அவசியம்.