கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்க்கக் கூடாததை பார்த்த மகன்! - அடுத்து நடந்த கொடூரம்!

Prasanth K

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (09:30 IST)

திருநெல்வேலியில் கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த மகன், தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் ரெஜினா (43). இவருக்கு கொம்பையா (22), வினோத் (13) என்று இரு மகன்கள் உள்ளனர். ரெஜினாவின் கணவர் பூல்பாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். ரெஜினா கூலி வேலை பார்த்து வந்த நிலையில், மூத்த மகன் கொம்பையா டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் ரெஜினாவிற்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது கொம்பையாவிற்கு தெரிய வந்த நிலையில் தனது தாயாரை கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி ரெஜினா தனது கள்ளக்காதல் உல்லாசத்தை தொடர்ந்துள்ளார்.

 

நேற்று முன் தினம் எடுப்பல் அருகே நடந்த கோயில் கொடைக்கு கொம்பையா சென்றுள்ளார். யாரும் இல்லாத அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கே வரச் சொன்ன ரெஜினா அவரோடு உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது கோயில் கொடை முடிந்து வீட்டிற்கு வந்த கொம்பையா இருவரையும் உல்லாசமான கோலத்தில் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட, சைக்கிளுக்கு காற்றடிக்கும்  இரும்பு பம்பை கொண்டு ரெஜினாவை தாக்கிக் கொன்றுள்ளார் கொம்பையா.

 

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ரெஜினாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதோடு, கொம்பையாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்