இந்தியாவில் சுமார் 11 கோடிப் பேருக்கு சர்க்கரை நோய் உள்ள நிலையில், ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருந்தாலும் சிலருக்கு கண்கள், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை களையவே இந்த ஆய்வு.
	 
	முதற்கட்டமாக, 10,000 நோயாளிகளின் உடலில் பொருத்தப்பட்டுள்ள தொடர் ரத்த சர்க்கரை கண்காணிப்புக் கருவி மூலம் 24 மணி நேரத் தரவுகளை சேகரித்து, ஏ.ஐ. மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.
	 
	இந்த ஆய்வு முடிவுகள் மூலம், எதிர்காலத்தில் எந்த நோயாளிக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளை மாற்றி அமைத்து அவர்களை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று டாக்டர் மோகன் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.