தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

Siva

ஞாயிறு, 2 நவம்பர் 2025 (17:11 IST)
பிகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்புக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறிது நேரம் ஒதுக்கி மீன்பிடிக்கச் சென்றது ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.
 
பெகுசரை மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு, ராகுல் காந்தி அங்குள்ள ஒரு குளத்திற்கு சென்றார். அங்கிருந்த மீனவர்களுடன் சேர்ந்து அவர் குளத்தின் நீரில் இடுப்பு ஆழம் வரை இறங்கி, மீன் பிடிக்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது மீனவர்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராகுல் காந்தியுடன் பேசினர்.
 
தேர்தல் பிரச்சார நெருக்கடிக்கு மத்தியில் சாமானிய மக்களுடன் இயல்பாக பழகிய ராகுல் காந்தியின் இந்த செயல் குறித்த விடியோ, காங்கிரஸ் கட்சியால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்