சென்னை திருவான்மியூர் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்து விடுதலையான திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், திமுக பிரமுகருமாக இருந்து வந்தவர் குணசேகரன். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் கௌதம் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நேற்று இந்த கொலை வழக்கில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் நண்பர்களுடன் அடையாறுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்தது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன், அவர்களிடமிருந்து தப்பிக்க காரிலிருந்து இறங்கி ஓடியுள்ளார். தொடர்ந்து அவரை துரத்தி சென்ற கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து குணசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழிக்குப்பழி சம்பவமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K