இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில், சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கத்தி குத்துத் தாக்குதலில் 10 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே நடந்தபோது, ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
 
									
				
	 
	காயமடைந்தவர்களில் ஒன்பது பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.