ரஜினிகாந்த் படத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் டுவிட்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (17:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக இன்று காலை செய்தி வெளியான நிலையில் இது குறித்து விளக்கமளித்து போனிகபூர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடமாக தனது நண்பராக இருந்து வருகிறார் என்றும் அவரது படத்தை தயாரிக்க முடிவு செய்தால் நானே முதலில் அறிவிப்பேன் என்றும் எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் தனது டுவிட்டரில் போனி கபூர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’  படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்