ரஜினி 169 படத்தின் கதாநாயகி யார்? நீளமாக போகும் லிஸ்ட்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:49 IST)
ரஜினி நெல்சன் கூட்டணியில் உருவாக உள்ள படம் தற்காலிகமாக தலைவர் 169 என அழைக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை குறுகிய காலத்தில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியவர்களின் பெயர்கள் பரிசீலணையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியோடு இணைந்து நடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்