மண்பாண்ட கலைஞருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:15 IST)
ரஜினிகாந்தின் உருவத்தை மண்ணால் பொறித்த மண்பாண்ட கலைஞர் ஒருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். 
 
மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் என்பவர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருபவர் இவர் ரஜினியின் பல்வேறு மண் சிலைகளை தனது கலையின் மூலம் செய்துள்ளார்
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் மண்பாண்ட கலைஞர் ரஞ்சித்துக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
நீங்கள் மிக மிக திறமைசாலி என்றும் நீங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் என்றும் நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்றும் நிச்சயமாக நான் உங்களை ஒரு நாள் சந்திக்கிறேன் என்றும் நல்லா இருக்கு அண்ணா என்றும் அவர் அந்த வாய்ஸ் மெசேஜில் தெரிவித்துள்ளார். இந்த வாய்ஸ் மெசேஜ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்