உங்களை மிஸ் பண்றோம் ரிஷப் பண்ட்… டிவிட்டரில் புலம்பும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (09:19 IST)
டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட் இழந்து 151 ரன்கள் சேர்த்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.  இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் நான்கு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இப்போது ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் பரத் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி அணிக்கு எதிராக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள ரிஷப் பண்ட்டை மிஸ் செய்வததாக ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி புலம்பி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கதில் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அவர் ஓய்வில் இருந்து குணமாகி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்