ஒரே மாதிரி பந்தில் அவுட் ஆன கில் & புஜாரா… ரசிகர்கள் வேதனை!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (08:26 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் முன் வரிசை பேட்ஸ்மேன்களான கோலி, கில், ரோஹித் ஷர்மா, புஜாரா அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணம்.

இந்த இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ஒரே மாதிரி பந்தில் ஆட்டமிழந்தனர். கில், ஸ்காட் போலண்ட் வீசிய இன்ஸ்விங் பந்தை தடுக்க முயலாமல் பேட்டை மேலே தூக்கினார். ஆனால் பந்து ஸ்விங் ஆகி உள்ளே சென்று பவுல்ட் ஆனது.

அதே போலவே கேமரூன் க்ரீன் வீசிய இன்ஸ்விங் பந்தை பேட்டை மேலே தூக்கி விடமுயன்ற போது புஜாராவும் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த இரு விக்கெட்களும் பேட்ஸ்மேன்களின் மோசமான ஜட்ஜ்மெண்ட்டால் நடந்தன. இதனால் ரசிகர்கள் அவர்கள் மீது அதிருப்தியை தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்