இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:01 IST)
உலகக் கிரிக்கெட்டின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உள்ளது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 லீக் கிரிக்கெட் போட்டியாக உள்ளது.

அதனால் இந்தியாவில் நடக்கும், இந்திய கிரிக்கெட் அணி சம்மந்தப்பட்ட போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை பல கோடிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஜியோ சினிமா ஓடிடி இந்த போட்டிகளை ஒளிபரப்பும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்