இந்தியா போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு… முக்கிய வீரருக்கு காயம்?

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:42 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை மிகப்பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த தகவல் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்