நான் பி ஆர் ஏஜன்ஸி வைத்திருக்க வேண்டும்… ஜிம்பாப்வே தொடரில் இடம் கிடைக்காத விரக்தியில் வருண் சக்ரவர்த்தி!

vinoth
வியாழன், 27 ஜூன் 2024 (07:40 IST)
உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இம்மாத இறுதியில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அவர் “நானும் ஒரு PR ஏஜென்ஸி (தன்னை முன்னிறுத்தும் விதமாக மக்கள் தொடர்பு ஏஜென்ஸி) வைத்திருக்க வேண்டும்” என தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், மற்றும் துஷார் தேஷ்பாண்டே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்