நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியில் சென்னை அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று தரவரிசையில் முன்னேறி வருகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்து வரும் நிலையில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நாளை விளையாடாமல் போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவர் விளையாட முடியாமல் போனால் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்த சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி “ஸ்டம்ப்க்கு பின்னால் ஒரு இளம் வீரர் இருக்கிறார். அவர் அணியை நன்றாக வழிநடத்துவார். ஆனால் அதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
அவர் சுற்றி வளைத்து தோனியைதான் சொல்கிறார் என்பது எல்லாருக்குமே புரிந்துவிட்டது. இதனால் நாளை நீண்ட காலம் கழித்து தோனி கேப்பிட்டன்சி செய்ய வாய்ப்புள்ளதால் நாளைய போட்டியின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. நாளை போட்டியில் சிஎஸ்கேவில் டெவான் கான்வேயும் வந்துவிட்டால் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
Edit by Prasanth.K