சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் அவரை ரசிகர்கள் பேபி மலிங்கா என செல்லமாக அழைத்து வருகின்றனர். அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவரை வெற்றிகரமான ஒரு பவுலராக உருவாக்கியதில் தோனியின் பங்கு அளப்பறியது.
ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினாலும் இன்னும் சர்வதேசப் போட்டிகளில் அவர் தனது முத்திரையைப் பதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் பதிரனா தோனியை தன்னுடைய கிரிக்கெட் தந்தை எனக் கூறியுள்ளார்.
இதுபற்ரி பேசியுள்ள அவர் “ தோனி எனக்குக் கிரிக்கெட்டில் தந்தை போன்றவர். ஏனென்றால் சி எஸ் கே அணியில் அவர் எனக்கு அளிக்கும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் வீட்டில் என் தந்தை நடந்து கொள்வதைப் போலவே இருக்கும். அதனால்தான் நான் அவரை அவ்வாறு கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.