ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்டூவர்ட் பிராட். இவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் கூற முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார்.
அதன்பின்னர் பேசிய அவர், என் சிறந்த நண்பர் ஸ்டூவர்ட் பிராட். அவர் பல ஆண்டுகளாக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். எனக்காக உறுதுணையாக இருந்துள்ளார். என்று கூறினார்.
மேலும், அவர் ஓய்வு பெறுவதை நினைத்தால் மனம் கஷ்டமாக உள்ளது என்று கூறியுள்ளார்.