நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

vinoth

சனி, 12 ஏப்ரல் 2025 (08:21 IST)
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சி எஸ் கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளைப் பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 103 ரன்கள் மட்டுமே சேர்த்து படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சி எஸ் கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றதை அடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார். மொத்தத்தில் இந்த சீசனில் சி எஸ் கே அணி பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தோல்விகள் குறித்து பேசும்போது “நிச்சயமாக இந்த தோல்வி அணி வீரர்கள் மற்றும் உறுதுணை ஊழியர்கள் வரை எல்லோரையுமே பாதிக்கும். இதற்காக நிறைய விமர்சனங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.  இதுபோன்ற இக்கட்டான நேரத்தில்தான் நமது உண்மையான ரசிகர்கள் யார் என்பது தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்