சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

vinoth

சனி, 12 ஏப்ரல் 2025 (13:11 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து,  103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

சிஎஸ்கே வின் இந்த மோசமான பேட்டிங்கால ரசிகர்கள் முதல் பாதி முடிந்த உடனே மைதானத்தை விட்டு வெளியேறினர்.  இதையடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 51 டாட் பந்துகளை விளையாடியது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள்(?!) நடப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நேற்றைய சி எஸ் கே இன்னிங்ஸால் மொத்தம் 25,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்