ஆஷஸ் 5 ஆவது டெஸ்ட்… முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா முன்னிலை!

சனி, 29 ஜூலை 2023 (09:35 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இப்போது 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு முதல் நாளில் ஆட்டமிழந்தது.

அதையடுத்து ஆடிய ஆஸி அணி இரண்டாம் நாளில் 295 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்