மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்: சாம்பியன் பட்டம் பெற்றது MI நியூயார்க் சாம்பியன்..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (16:22 IST)
கடந்த சில நாட்களாக  மேஜர் லீக் கிரிக்கட் தொடர் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. 
 
இதில்  செட்டில் ஆர்காஸ் அணியும் எம்ஐ நியூயார்க் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செட்டில் ஆர்காஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது. குவிண்டன் டீகாக் 87 ரன்கள் அடித்தார்.
 
இதனை அடுத்து 184 என்ற இலக்கை நோக்கி விளையாடிய எம் ஐ நியூயார் அணி 16 ஓவர்களில் 184 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்துகளில் 137 ரன்கள் அடித்தார் என்பதும் அவர்தான் இந்த போட்டியின் ஆட்டநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தொடரின் ஆட்டநாயகனாக கேமரூன் கனான் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன் பட்டம் வென்ற எம்ஐ நியூயார்க் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்