ஆஷஸ் 5 ஆவது டெஸ்ட் போட்டி… வலுவான நிலையை நோக்கி இங்கிலாந்து!

ஞாயிறு, 30 ஜூலை 2023 (07:53 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இப்போது 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு முதல் நாளில் ஆட்டமிழந்தது.

அதையடுத்து ஆடிய ஆஸி அணி இரண்டாம் நாளில் 295 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 9 விக்கெட்களை இழந்து 389 ரன்கள் சேர்த்துள்ளது.

இதன் மூலம் தற்போது 377 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் ஸாக் கிராவ்லி, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்