முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் சுருண்ட இலங்கை! – ஓங்கும் இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:54 IST)
இந்தியா – இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் இலங்கை ஆல் அவுட் ஆனது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அனைத்து வீரர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 252 ரன்களை குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்து சதம் நெருங்கிய நிலையில் அவுட் ஆனார். அதை தொடர்ந்து இன்று இலங்கை அணி பேட்டிங் தொடங்கியது.

இன்னிங்ஸ் தொடங்கி முதல் 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியது. இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்திய நிலையில் 35 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்