ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

Mahendran

செவ்வாய், 13 மே 2025 (18:09 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஆன்மிக வழியில் மன அமைதியை தேடி சென்றுள்ளார்.
 
மே 12ஆம் தேதி, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். .
 
இந்நிலையில், தனது ஆன்மிக நம்பிக்கையைத் தொடர்ந்து, பிரபல ஆன்மிக குரு பிரேமானந்த் சஹாரன் ஜி மகாராஜை விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின் வீடியோவை அவரது பக்தர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர், அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விராட் கோலி, தனது குடும்பத்துடன் இதே ஆன்மிக குருவை சந்தித்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, தனது ஓய்வுக்கு பிறகு மீண்டும் அவரைச் சந்தித்துள்ள விராட், மனதிற்கும் வாழ்விற்கும் அமைதி தேடி நடக்கின்றார் என்பதையும் இச்செய்தி வெளிப்படுத்துகிறது.
 
முன்னணி வீரராக மட்டுமல்ல, வாழ்க்கையின் ஆழமான பயணத்திலும் விராட் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்