பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

vinoth

செவ்வாய், 13 மே 2025 (13:52 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.

அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில்தான் என்று தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. பும்ரா அதற்கான தேர்வில் இருந்தும் அவரின் உடல்தகுதியைக் கணக்கில் கொண்டு பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பும்ராவுக்கு டெஸ்ட் கேப்டன்சியை அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “பும்ராவிடம் கேப்டன்சியைக் கொடுத்தால் அவர் தன்னுடைய உடல்தகுதியைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றார் போல தான் எத்தனை ஓவர்கள் பந்துவீசலாம் என முடிவெடுத்துக் கொள்வார். ஆனால் மற்ற கேப்டன் என்றால் அவர் கூடுதலாக சில ஓவர்கள் வீசவேண்டியிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்