உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதால் உலக அளவில் பொருளாதார, அரசியல் சூழலில் சிக்கல்கள் எழுந்துள்ளன. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதேபோல ஏற்றுமதி, இறக்குமதி மந்த நிலையால் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெயின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பங்கு சந்தை வர்த்தகமும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் போர் சூழலால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.