ஐபிஎல் போட்டிகள் 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் அதில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டுமென முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் சூழல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் 17ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர உள்ள ஐபிஎல் போட்டிகளில் பாடல்கள் ஒளிபரப்புவது, கொண்டாட்டம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ”தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K