களம் ஐதராபாத்துல மும்பை இந்தியன்ஸ வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் … ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (21:23 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசனின் எட்டாவது போட்டி இன்று ஐதராபாத்தில் எஸ் ஆர் ஹெச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் புகுந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை நடுங்க வைத்தனர். ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீரரான அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் பும்ரா ஓவரை தவிர அனைவரின் ஓவரிலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கை காட்டினர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த அணியின் ரன்ரேட் 13 க்கு மேல் சென்றது.

இவர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசன் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளாசன் அதிரடியாக விளையாடி 34  பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார்.  இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரானது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்