ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:38 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

ஐபிஎல் தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாகியுள்ளார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அவர் முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டினார்.

ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை அவர் கடந்தார். மிகக்குறைந்த வயதில் இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்