விக்கெட்டே விழாமல் 200 ரன்கள்! – பாகிஸ்தான் அணி புதிய சாதனை!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (08:55 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விக்கெட்டே விழாமல் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபர் ஆசம் 66 பந்துகளில் 110 ரன்களை ஈட்டினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 88 ரன்களை குவித்தார்.

இதனால் 19.3 ஓவர்களுக்குள் 203 ரன்களை குவித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் கூட இழக்காமல் பாகிஸ்தான் விளையாடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் விக்கெட் இழக்காமல் 200 ரன்கள் சேஸ் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்