ராணி II எலிசபெத் -ன் இறுதிச் சடங்கில் அவமரியாதை செய்த ஹாரி !

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (22:09 IST)
ராணி II எலிசபெத் -ன் இறுதிச்சடங்கின் போது, ''கடவுளே அரசைக் காப்பாற்றுங்கள்'' என்ற பாடலை எல்லோரும் பாடினர், ஆனால், ஹாரி மட்டும் இதைப் பாடவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து மகாராணியாக நீண்ட நாட்களாக அரியணையில் அந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் , கடந்த 8 ஆம் தேதி தன் 97 வயதில், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் உடல் லண்டன் மா நகரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இங்கு, பல மணி நேரத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வைசையில் நின்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ்ட் உள்ளிட்ட  சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 500தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பட்டது.  இந்திய குடியரசுத் தலைவர் திரபதி முர்மு, இந்தியா சார்பில்  ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்..

இந்த நிலையில், ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி அவமரியாதை செய்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிராரனை  நடந்துகொண்டிருந்தது. இதில்,மன்னர் சார்லஸ், அவரது மகன் களும் இளவரசர்களுமான ஹாரி, வில்லியம் ஆகியோர்  பங்கேற்றிருந்தனர். அப்போது, கடவுளே அரசைக் காப்பாற்றுங்கள் என்ற அர்த்தமுள்ள பாடலை எல்லோரும் பாடினர், ஆனால், ஹாரி மட்டும் இதைப் பாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இளவரசர் ஹாரி,  பிரபல நடிகை மேகனை திருமணம் செய்துகொண்டபின்,  அரச குடும்பத்தில் இருந்து விலகி,சராசரி வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து அமெரிக்காவில் குடியேறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்