பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பள உயர்வு.. நீண்ட நாள் போராட்டத்துக்கு கிடைத்த பலன்!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (08:19 IST)
உலகக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று பாகிஸ்தான் வீரர்கள் ஐதராபாத் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான்  வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு 50 சதவீதம், ஒருநாள் போட்டிகளுக்கு 25 சதவீதமும், டி 20 போட்டிகளில் 12.5 சதவீதமும் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சம்பள உயர்வு கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அமலுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்