சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன் திடீர் மாயம்.. பாகிஸ்தானின் பரபரப்பு..!

புதன், 27 செப்டம்பர் 2023 (17:14 IST)
பாகிஸ்தானில் இருந்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சையத் மகன் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பயங்கரவாதி  ஹபீஸ் சயீத் மகன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாயமாகி உள்ளார். 
 
செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஹபீஸ் சயீத் மகன் மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பவர் என்பதும் அவர்களின் மகன் தற்போது மாயமாகி இருப்பதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பாகிஸ்தான் காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்