நியுசிலாந்து அணிக்கு அடுத்த அடி… உலகக்கோப்பை தொடரில் இருந்து வில்கும் மற்றொரு வீரர்!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (14:54 IST)
நியுசிலாந்து அணியில் ஆல்ரவுண்டராக திகழ்பவர் மைக்கேல் பிரேஸ்வெல். இவர் கடந்த 9 ஆம் தேதி இங்கிலாந்தில் நடந்த டி 20 போட்டியின் போது காயமடைந்துள்ளார். அவருக்கு குதிகால் தசைநாரில் ஏற்பட்ட காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து அவர் முழுவதும் குணமாக 6 மாதங்கள் என சொல்லப்படுகிறது. அதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

முன்னதாக ஐபிஎல் போட்டியில் காயமடைந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக வில்லியம்சன் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் டாம் லாதம் அணியை வழிநடத்தலாம் என சொல்லப்படுகிறது. வில்லியம்சன் அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்