உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் வெல்வது கடினம்… கங்குலி கருத்து!

செவ்வாய், 13 ஜூன் 2023 (07:49 IST)
இந்திய அணி சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் அணி வீரர்களும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

ஐபிஎல் போட்டிகள் முடிந்து அடுத்த 10 நாட்களுக்குள்ளாகவே WTC இறுதிப் போட்டி வந்ததால் இந்திய அணியால் சரியாக தயாராக முடியவில்லை என கேப்டன் ரோஹித் ஷர்மா காரணம் கூறியுள்ளார். இதனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்ற விமர்சனமும் ரசிகர்களால் வைக்கப்படுகிறது.

இந்ந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ள கருத்து சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அவர் “உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஏனென்றால் உலகக்கோப்பையில் நீங்கள் 4-5 போட்டிகளை விளையாடியதும், அரையிறுதிப் போட்டிக்கு செல்லலாம். ஆனால் ஐபிஎல்-ல் 14 போட்டிகள் விளையாடி, அதன் பின்னர் ப்ளே ஆஃப் விளையாடி, பின்னரே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்