200+ சேஸிங்கின் போது தோனியின் ஸ்பெஷலே இதுதான்… புகழ்ந்து தள்ளிய கெவின் பீட்டர்ஸன்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (13:09 IST)
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த சீசன் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி தொடராக இருக்கலாம் என தெரிகிறது.

இதனால் ஆர்வமாக தோனி ரசிகர்கள் எல்லா போட்டிகளுக்கும் மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்து மைதானத்தையே மங்களகரமாக்குகின்றார்கள். இந்நிலையில் தோனியின் பினிஷிங் ஸ்டைல் பற்றி பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் “200க்கும் கூடுதலான ரன்களை டி 20 போட்டிகளில் சேஸ் செய்யும் போது போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். தோனி இதை பலமுறை செய்துள்ளார். அவரின் ஸ்பெஷாலிட்டியே இதுதான். அவரிடம் இருந்து இதை மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் புகழ்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்