சோதனையிலும் சாதனை.. மாஸ் காட்டும் K.G.F கூட்டணி! – ஆர்சிபி புதிய சாதனை!

புதன், 26 ஏப்ரல் 2023 (16:31 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் பல அணிகளும் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்ற அணிகளை விட அதிக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வருகின்றது. லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியும் படைக்காத சாதனைகள் இல்லை. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் குறைவான ஸ்கோர், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமான ஸ்கோர் சேஸிங் இரண்டையுமே செய்தது ஆர்சிபிதான்.

சீசனுக்கு சீசன் ஈ சாலா கப் நமதே என ஆர்சிபி ரசிகர்கள் காத்திருந்தாலும் கிடைப்பது என்னவோ ஏமாற்றம்தான். தற்போது முதல் பாதி லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னணியில் உள்ள அணிகளை விடவும் அதிகமான அரை சதங்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது ஆர்சிபி அணி.

இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆர்சிபி அடித்துள்ள அரை சதங்களின் எண்ணிக்கை 12.  ஆர்சிபியின் KGF (Kohli, Glen Maxwell, Faf du Flesis) என வர்ணிக்கப்படும் இந்த மூவர்தான் இந்த சாதனைக்கு காரணம். பெரியவர் ப்ளெசிஸ் 5 அரை சதங்களும், கோலி 4 அரை சதங்களும், மேக்ஸ்வெல் 3 அரை சதங்களும் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளனர்.

இன்றைய போட்டியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்தான் என்றாலும் இந்த மூன்று பேரை தாண்டியதும் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவிழந்துவிடுவதால் ஆர்சிபி சரிவை சந்திக்கிறது. இவற்றை மீறி கேஜிஎப் கூட்டணி வென்று காட்டுமா என்பதை பார்ப்போம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்