இந்தியாவுடன் தாக்குப்பிடிக்குமா இலங்கை??

Arun Prasath
சனி, 4 ஜனவரி 2020 (14:24 IST)
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2019 ஆம் ஆண்டில் மிகவும் சொற்ப வெற்றிகளையே பெற்றது.

இந்திய அணிக்கு கடந்த 2019 ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. மேலும் இந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனினும் ஷிகர் தவான், பும்ரா ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியுடன் இலங்கை அணி தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்