இந்தியா அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. கே எல் ராகுல் குடும்ப காரணங்களால் இந்த தொடரில் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்த அணியில் ப்ருத்வி ஷா இடம்பெற்றுள்ளார்.