பாகிஸ்தானை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறிய இந்தியா!

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (12:32 IST)
ஜுனியர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது. இதன் முலம் இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி முன்னேறியது.
 
கிறிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் ஷுப்மன் கில் சதம் கடந்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார், மன்ஜோத் கல்ரா 47 ரன்களும் கேப்டன் பிருத்வி ஷா 41 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை இந்திய பவுலர்கள் சீட்டுகட்டுகள் போல சரித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய பவுலர்களில் இஷான் போரெல் 4 விக்கெட்டுகளையும் சிவா சிங் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதன் அபார வெற்றியின் முலம் இந்திய அணி ஜுனியர் உலககோப்பை இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இறுதியாட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்