தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸை சிலாகிக்கும் சி எஸ் கே ரசிகர்கள்… ஓ காரணம் இதுதானா?

vinoth
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (11:07 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி டி 20 வரலாற்றின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 287 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர்.

இதன் பின்னர் ஆடிய ஆர் சி பி பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை சேர்த்தது. ஆனால் விராட்கோலி 42 ரன்களுக்கும் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்த போது அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அதற்கடுத்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடியதை சி எஸ் கே ரசிகர்கள் வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் அவரின் இன்னிங்ஸால் ஐதராபாத் அணியால் பெரிய மார்ஜினில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக நெட் ரன்ரேட்டில் சில புள்ளிகள் சிஎஸ்கேவை விட குறைவாக பெற்று நான்காவது இடத்திலேயே தங்கியது அந்த அணி. அதன் காரணமாக தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸை சி எஸ் கே அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்