பிசிசிஐக்கு எதிராக பகிரப்பட்ட ஹேஷ்டேக்… டிவிட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:14 IST)
இந்திய அணி பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. நியுசிலாந்தில் நடக்கும் டி 20 போட்டி தொடருக்குப் பிறகு டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷுக்கு சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

இந்த அணிக்கான தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிசிசிஐ திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் அளிக்காமல், ஜாதி அடிப்படையில் வாய்ப்புகளை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைக் குறிப்பிட்டு டிவிட்டரில் “#castiestBCCI’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்