4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி… கரைசேர்ப்பாரா பாண்ட்யா?
செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:20 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இருந்து இந்திய அணியை மீட்டு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கரையேற்றுவாரா என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.